தமிழர்களுக்கு திருநெல்வேலி அல்வாவின் மகிமை பற்றி சொல்ல தேவை இல்லை. பெயரை கேட்டாலே எச்சில் ஊற வைக்கும் அந்த பேமஸ் இருட்டு கடை அல்வாவை ஹைதராபாத்தில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டும் நானும் மற்றும் என் இரு நண்பர்களும் நான்கு நாட்களுக்கு மேலாக எதிர்பார்த்து செமத்தியாக ஏமாந்த கதை இது.ஒரு நாள், எங்களுடைய பாசமிகு நேசமிகு நண்பர் (பெயர் வேண்டாமே! 'நம்ம பையன்' என்று மட்டும் அழைப்போம்) தன் அலுவலகத்தில் தன்னை திருநெல்வேலி அழைத்து செல்வதாக எங்களிடம் கூறவே நாங்கள் சப்பு கொட்டி கொண்டு " மச்சி! வரும் போது இரண்டு கிலோ அல்வா வாங்கிட்டு வாடா மச்சான் " என்று சொல்லவே அந்த பாசமிகு நண்பனும் "ச்சே !! என்ன இது சின்னபுள்ள தனமா! நெல்லை பக்கம் போக போறேன்; அல்வா இல்லாமலா வருவேன் ?" என்று எங்களை வாயடைத்தான்.
நான் ஒரு படி மேலே சென்று என்னுடைய தமிழ்நாடு சிம் கார்டையும் கொடுத்து அனுப்பினேன் - பையன் ரோமிங்கில் போன் உபயோகம் செய்யமாட்டான். எனவே அல்வா வாங்கிவிட்டனா இல்லையா என்று தெரிந்துகொள்ள இது தான் வழி என்று ஒரு கப்பிதனமான ஐடியா ஏன் மண்டைக்குள் உதித்தால்!
நம்ம பையனும் அன்று காலை ஹைதராபாத் விமான நிலையம் சென்றடைந்து மீன் கொத்தி ஏர்லைன்ஸ் மூலமாக சென்னை சென்று அங்கிருந்து மற்றுமொரு மீன் கொத்தி பிளைட் மூலமாக தூத்துக்குடி சென்றடைந்தான். அன்று மாலை அவனிடம் போனில் பேசினோம். "தூத்துக்குடியில இருக்கிறேன் ! நைட் கடைல சாப்பாடு கட்டு கட்டுன்னு கட்ட போறேன். என் கூட வந்தவரும் நானும் போறோம் !" என அப்டேட் கொடுத்தான்.
மறுநாள் தூத்துக்குடியில் அலுவலக பணிகள் முடிவடைந்தவுடன் திருநெல்வேலி செல்வதாக கூறியவன் "எந்த வேலை முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. அல்வா இல்லாமல் நான் ஹைதராபாத் வர மாட்டேன்" என்று ஒரு பெரிய பெரிய (ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த) பிட் ஐ போட்டான். நாங்களும் அந்த பிட் ஐ நம்பி பல பல ப்ளானிங் செய்தோம் (அவைகள் அனைத்தும் இன்னொரு இடுகையில்!)
மறுநாள் காலை, மதியம் என நம்ம பையனுக்கு போன் செய்ய ட்ரை பண்ணி பண்ணி கிட்டத்தட்ட வெறுத்துபோய் கடைசியாக ஒரு முறை ட்ரை பண்ணுவோம் என்று ட்ரை பண்ணினால் அதிசயமாக நம்ம பையன் பேசினான். ஒரு முக்கிய மேட்டர் சொல்லாமல் விட்டு விட்டேன். நம்ம பையன் போன் அட்டென்ட் பண்ணிடால் அது உலக அதிசயம் தான். இத
ஏன் சொல்றேன்னா நீங்க நம்ம பையனுக்கு போன் பண்ணி பாத்தா தெரியும் !!
மறு நாள் போன்ல "ரெண்டேகால் கிலோ அல்வா வாங்கிருக்கேன். நான் இப்போ கால் கிலோ சாப்பிடுவேன். மீதி ரெண்டு கிலோ உங்களுக்கு" அப்டீனு ஒரு போடு போட்டன். அது மட்டுமா? எங்கடா வாங்கின அப்டீனு கேட்டோம். "ஹ்ம்ம், லைன்ல நின்னு இருட்டு கடைல வாங்கிட்டேன்" அப்டீனான்.
அவன் அப்படி சொன்னதுக்கு பிறகு எங்களுக்கு லேசா வருத்தம் வேற. "ச்சே! நம்ம பையன் நம்ம சொன்ன மாதிரி செஞ்சிருக்கான். இவன நம்ம தப்பா எடை போட்டுடோமே" அப்டீனு. அல்வா வரபோகுது பிளான் எல்லாம் செமத்தியா போக போகுது என ஏக குஷி இன்னொர்தருக்கு(அவரை பத்தி வேறொரு இடுகையில்!)
நம்ம பையன் வர வேண்டிய நாளும் வந்தது. நம்ம பையன் அவ்ளோ தூரத்துல இருந்து அல்வா வேற வாங்கிட்டு வரான், அவனுக்கு சிக்கென் பண்ணுவோம் அப்டீனு நானும் என்னோட அந்த குஷி நண்பரும் சேர்ந்து சிக்கென் வாங்கிட்டு வந்து, கழுவி, மசாலா எல்லாம் போட்டு, பதம் எல்லாம் கரெக்ட் ஆக இருக்கணும் என்று ரொம்ப கவனமாக சமைக்க ஆரம்பித்தோம். இதற்கு நடுவில் எங்கள் நண்பியும் வந்து சேரவே (எல்லாம் அல்வா திங்க தான்) முண்டியடித்து சமைத்து முடித்தோம்.
மணி ஒன்பதுக்கு மேல் ஆனது. நம்ம பையன் வந்த பாடில்லை. என்னடா இது, ஏழரை மணிக்கெல்லாம் ஏர்போர்ட் வந்து விடுவேன் என்று சொன்னானே? ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு வரதுக்கு மிஞ்சி மிஞ்சி போனா ஒன்றை மணி நேரம் ஆகும். ஏன் இவன் இன்னும் வந்து சேராம இருக்கான் அப்டீனு மறுபடியும் போன் மேல போன் பண்ணி பார்த்தோம். வழக்கம் போல நம்ம பையன் போன் அட்டென்ட் பண்ணவே இல்லை.
இதற்க்கு நடுவில் எங்களுக்கு பசிக்க ஆரம்பிக்கவே, சாப்பிடலாம் அப்டீனு உட்கார்ந்தோம். அவனுக்காக தான சிக்கென் எல்லாம் பண்ணிருக்கோம் அவன் வந்த பிறகு சாப்பிட ஆரம்பிக்கலாம் அப்டீனு யோசிச்சோம். இவன் எப்ப வருவான்ற டவுட் வேறு. சரி நம்ம சாப்பிடுவோம், அவன் வந்து சாப்பிட்டு விட்டு தூங்கட்டும் என முடிவு செய்து நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்.
பத்து மணி வாக்கில் நம்ம பையன் பெல் அடித்தான். ஆசை ஆசையாக நாங்கள் மூன்று பேரும் வாசலுக்கு சென்று கதவை திறந்தோம். நம்ம பையன் அங்கு அவனுடைய மூட்டை முடிச்சோடு நின்று கொண்டிருந்தான். "வா மாப்ள!" அப்டீனு அவனுடைய பை எல்லாத்தையும் உள்ளே வைத்துவிட்டு, அல்வா எங்கடா ? அப்டீனு கேட்டோம்.....................
இதற்கு மேல் அன்று நடந்தவை அனைத்தும் இரண்டாம் பாகத்தில் !
அந்த "நம்ம பையன்" யார் என்று தெரிந்து கொள்ள முடியுமா?
ReplyDeleteWhy is that ppl tend to give halwaas only to you? lol :-D
Namma Paiyan - you know him very well.. It was not only me who was given a big Halwa - there are two others too !!! read the blog carefully....
ReplyDeleteI know him very well? This makes it interesting, lemme guess.
ReplyDeleteRead it again, you'll definitely know it. Apdi nee kandupidikalana nee wasteland.....
ReplyDelete